Wednesday, January 28, 2009

நாகராஜன் கவிதைகள்

குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்
ந.நாகராஜன்

குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரத்தில்
கண்களைக் காணவில்லை.
காதுகள் கொம்புகளாயின
தொங்கிய நாக்கில் வழிந்த சொட்டுகள்
எச்சிலா...ரத்தமா...எனத் தெரியவில்லை.
பற்களில் ஏதோ ஒட்டியிருந்தது.
முடிகள் முள்ளம்பன்றியின்
முட்கள் போலிருந்தன.
கன்னங்களில் தழும்புகள் போல் கோடுகள்.
தாடையில் உடைசல்
சிதைக்கப்பட்ட உடல் போல்
சிறு சிறு கோடுகள்
வாயருகே ஒரு கை சோற்றுருண்டையுடன்.
அது என்னுடையதல்ல
வரைந்த போதிருந்த குழந்தையின் முகத்தை
நான் பார்த்திருக்க நேர்ந்தால்
சித்திரத்தின் அர்த்தம் தெரிந்திருக்கக் கூடும்
இப்போது
சித்திரம் வரைந்த குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது

Tuesday, December 30, 2008

ஹெச்.ஜி.ரசூல் படைப்புகள்



குன்னிமுத்துகளின் தவிப்பு

அந்திச் சிவப்புச் சூடி
நாணப்பட்ட விரல்களுக்கு
உதடுகள் வருடித்தரும் முத்தம்
பல்லாங்குழி ஆட காத்திருக்கும்
குன்னிமுத்துகளின் தவிப்பு.
சுறுமா விழிகளும்
நெத்திச் சுட்டியும் எதிர் நின்று பேச
கூச்சமுற்ற இரவின் நீளம்
மணவறை பூந்திரைக்குள்
காற்றாகி நுழையும்

நெஞ்சின் தாள ஓசைகளில்
ஒன்றையொன்று நெருங்கி
உச்சிக் குளிர மோந்து
உயிரில் உயிர் கரையக் கரைய
கணந்தோறும் துளிர்க்கும்
ஒரு கொத்துக் கனவுகள்.

உயிரைப் பாதுகாத்து
எங்கோ ஒளித்து வைத்திருக்கும்
உடம்புக்கும் தெரியாது
மைலாஞ்சி பூக்களால்
மனசுக்குள் வரைந்த ஒவியம் பற்றி.
பற்ற வைத்த திரியின் வாசம் அறையெங்கும்
குறும்பு செய்து ஓடிமறையும்
பழக்கப்பட்ட சிறுமியின்
தலையாட்டலில் உதிர்ந்த பூக்கள்
ரைஹாலுக்கு அடியில்.



நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளும் தவம்


இரவின் இருளில் மெய்மறந்து தூங்கவும்
விண்ணிலிருந்து விழுந்து கொண்டிருக்கும்
நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளவும்
நாளெல்லாம் தவமிருந்தேன்
கனவுகலைந்தபோது
எனது இருப்பிடம் தகர்க்கப் பட்டிருந்தது.
விடாது பொழிந்து பார்க்கலாமென
மேகங்களில் வசித்திருந்தேன் மழையைப் போல.
கொண்டைமுறிந்த பனைமரங்களையும்
வருக்கை சக்கைகள் காய்க்கும் பிலாமரங்களையும்
வெட்ட வெட்ட பால்சுரக்கும் ரப்பர்மரங்களின்
உதிர்ந்த இலைகளையும் நனைத்தது தவிர
எந்த இதயங்களிலும் ஈரம் படரவில்லை.
துக்கத்தில் உறைந்திருந்த காலம் உறைய
மூடிய கைகளைத் திறந்து
பட்டாம்பூச்சிகளைப் பறத்திவிடுகிறேன்.
வனமெங்கும் பறந்து திரிந்துவிட்டு
உள்ளங்கைகளில் திரும்பவும்
அது உட்கார்ந்து கொள்கிறது.
எனதுலகம் உருமாறுகிறது
எல்லோரும் பெயர் சொல்லி அழைக்கும் போது
என்ன பெயர் சொல்லி உன்னை அழைக்க
தந்தைதாய் பெயரறியாத
அந்த பட்டாம்பூச்சிக்கு ஒரு பெயர் சூட்டினேன்.
எப்போதும்போல்
அது ஒரு குழந்தையாய் சிரிக்கிறது.



வந்து போகும் நீ


எந்தச் சாயலும் இல்லாமல்
வாழ் நினைத்தாலும்
எந்தச் சாயலாவது தெரிந்து விடுகிறது.
சாயலற்று வாழ்வதில்தான்
அர்த்தமென சொன்னாலும்
தவிக்கமுடியாததாகிவிட்டது
சாயலோடு வாழ்வது.
ஞாபகத்தை கிளறிவிட்டு
மெளனத்தில் உறைகிறாய்
முன்நின்று எதுவும் பேசாமல்
இயல்பாய் சிரித்து
பதிலுக்கு எதையேனும் செய்ய
தோன்றவில்லை இப்போது.
எனக்கென என்றோ ஒருநாள்
நீ செய்த இதயமொன்று.



உறைந்த தேவதைகள்

பல நூறு இறக்கைகளோடு
முகமெல்லாம் வியர்க்க
தூரங்களை பறந்து தாண்டிய
களைப்பெதுவுமின்றி
என் வாசல் முற்றத்தில் வந்திறங்கின தேவதைகள்
மிகுந்த அச்சத்தோடு
தாளிடப்பட்ட கதவுகளைத் தட்டின.
நரகத்தீயின் வெக்கைத் தாங்காமல்
படபடத்து கரிந்த சிறகுகளின்
அடையாளம் சிறிது தெரிந்தது.
முற்றுகையிடப்பட்ட கதவுகளின் பின்னால்
எந்த வரிகளிலும் நுழையமுடியாத
துயரங்களின் சுயசரிதைக் குறிப்புகள்
சிதறிக் கிடந்திருக்க கூடும்.
தன்னிருப்பை அழிக்கவிரும்பாது
பூட்டிய கதவின் முன்பு நின்ற
தேவதைகள் குழப்பமடைந்திருந்தன
இரவு மாறிச் சுழன்றோய
உறுமிக் கொண்டு திரும்பிய மேகத்தினுள்ளே
கிழிபட்ட தேவதைகள் சிந்திய ரத்தம்
உறைந்து கிடந்தது.


மரணச் சமாதியின் குருவி
ஹெச்.ஜி.ரசூல்

கிணற்றுநீரில் மிதந்த நிலவை
கைதூக்கிவிட யாருமில்லை.
இருளில் மூழ்கியது நிலவு.
வெளியேற்றப்பட்ட நட்சத்திரங்கள்
பொடிப் பொடியாய் பொடிந்து
அந்தரத்தில் நொறுங்கிக் கொண்டிருக்க
எல்லாதிசைகளிலும் உதிக்கும்
அபூர்வதருணத்தை எதிர்நோக்கி
மெளனமாய் காத்திருந்தது வானம்.
செடிகளில் பூத்த பிச்சிகள்தோறும்
உட்கார்ந்திருந்த பனித்துளிகளில்
கண்ணீர்துளியும்
அழுகைதுளியும்
ரத்தத் துளியும்
மாறி மாறி உருக்கொள்ள
துளிகளில் உருண்டோடும் காலம்.
கொம்புமுளைத்த ராட்சச பூதங்கள்
ஒவ்வொன்றாய் உருமாறி எழுகின்றன.
எங்கும் பிணக்காடு
வனங்களிலும்
பதுங்குக் குழிகளிலும்
வெடிச் சிதறல்களில் முகமிழந்த
கூடிழந்த சின்னஞ்சிறு புறாக்களின்
அம்மாக்களை காணவில்லை.
விடுதலையை மீட்கமுயன்று
தோற்றுப் போகாமல்
பிணமாகிப் போனவர்களின்
உயிர்த்தெழுதல் குறித்து யோசிக்கிறது
மரணச் சமாதியின் குருவி.

பெருந்துயரின் பேரலை

அன்புமயமாக
நீ எழுதிக் கொண்டிருந்த கவிதையை
பாதியிலேயே நிறுத்திவிட்டு
பறந்து போய்விட்டாய்
ஒரு பட்டாம்பூச்சியைப் போல.
வார்த்தை பேச்சு எழுத்து
எதிலும் அடக்கிச் சொல்லமுடியாத
பெருந்துயரம் பேரலையாய் எழுந்து
இதயத்தை முட்டித் தள்ளுகிறது.
ஆறுதல் கொள்வதற்கு
திரும்பவும் உன் பெயரை
உச்சரித்துக் கொள்கிறேன்
கண்மணிகளைக் காப்பாற்றிக் கொண்டிருந்த
இமையொன்று உதிர்ந்து வீழ்ந்தது.
கண்ணீர் சிந்த சக்தியற்று
சப்தநாடியும் உறைந்து போக
அழுதுபுரண்டெழும் ஞாபகம்
உன் முகமும் உன் மனசும்
உயிரைத் தாண்டிவந்து
என்னோடு பேசிக் கொண்டிருக்கிறது.


கதைகதையாய் சொல்லத் தெரிந்தவள்

கதைகதையாய் சொல்லத்
தெரிந்தவளிடம்
இப்படியானதொரு துயரம்
நிகழ்ந்ததில்லை.
அலைகளை ரசித்த குழந்தையின்
கண்களில்
ஒளிவற்றிப் போன இருட்டு.
கொண்டுவந்து சேர்த்த
குதூகலங்கள்
பொட்டித் தெறித்து
விம்முகின்றன.
ஓயாமல் வீசிக்
கொண்டிருக்கும் கடற்காற்றில்
இதயம் நொறுங்கிச் செத்த
வேதனையின் வேறொரு வாசனை.
இரவுகளில் கைப் பிடித்துச்
செல்லும்
கட்டுமரங்களின் சிதிலங்களில்
நேற்றைய கனவுகளின் மிச்சம்
தங்கியிருந்தது.
உயிர்களின் வரைபடமொன்று
மரணத்தின் சுவடுகளை
அழிக்கமுடியாமல்
தன்னையே மாய்த்துக்
கொள்கிறது.
கடற்புறத்தின் கண்ணீர்
மெளனங்களை
எழுதும் மொழி தெரியாமல்
நடுங்குகின்றன விரல்களின்
நுனி.
மனம் சொல்ல நினைப்பதை
வார்த்தை சொல்ல மறுக்கிறது.
ஆயுதங்களால் அழிக்கப்பட்டவை
அநேகம்.
குவிந்து கிடக்கும் சடலங்களை
கொத்தித் தின்னப் பறக்கும்
பருந்துகளுடன்
வெற்றிடம் எங்கும் விரிகிறது.
விடிந்தும் பொழுது இருள்
சூழ்ந்தே
விடிகிறது இப்போதெல்லாம்.



ஒரு மாயவானம்


அலையடித்துக் கொண்டிருக்கிறது
ஓய்ந்தபாடில்லை
கரும்பாறையாய் இறுகி உட்கார்ந்து
அலைகளை சிதறடிக்க விருப்பம்.
தெரியாத திசைகளிலிருந்தும் புறப்பட்டு
நெருங்கிமுத்தமிடும் காற்றில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது ஈரம்.
மேகம் தொட்டுரச எண்ணும்
வேளிமலைக் காற்றின் வருடல்
கடலும் காயலும் அலைபுரண்டு
விட்டு விலகி
வெற்றிடமாகும் பொழிக்கரை.
தோள் சுமக்கும் பல்லக்குகளை
வீசி எறிந்துவிட்டு
புறாக்களோடும் கிளிகளோடும்
பேசத் தொடரும் தேடல்
உடலை சுமக்கமுடியாமல்
நழுவி ஓடி விடுகிறது உயிர்
மழையாகவோ நதியாகவோ
அருவி மாலையாகவோ
பிரபஞ்சம் முழுதும் உருகி வழிய
ஒருமாயவனத்தின் வரிகளுக்குள் கடல்.


கரித்துண்டால் குறித்துவைத்த
தோற்றம் மறைவின் குறிப்புகள்

தோற்றம் மறைவுக் குறிப்புகளிலிருந்து
அலைபுரளும் எழுத்துக்கள்விடுபடா வரலாற்றின் சுவடுகளை
வரைந்து தீர்க்கின்றன.
ஆதித் தமிழனின்
உடல்மனம் சேர்ந்ததொரு கலவையில்
நூற்றாண்டுகள் தம்மைக் கரைத்து விட்டன.
ஆயுதம் தரித்த கடவுள்களாக
எங்கும் குழந்தைகள்
தொப்பூள்கொடி அறுபட்ட
பிறப்பில் ஒலித்த குரல்
அழுகையென கற்பிதம் செய்யப்பட்டது.
பிரபஞ்சத்தை
சின்னஞ்சிறு கண்களால்தரிசித்த
ஆனந்ததின் கூக்குரல் அது.
அதிகாரத்தைப் புறக்கணித்து
தனிமையைச் சூடிய பெருங்கனவொன்று
வவ்வாலாகி தலைகீழாய் தொங்குகிறது.
மரணத்திற்காகவே பிறப்பென்ற
குறுக்கப்பட்ட வாசகத்தை சுமந்து கொண்டு
எதிரே உட்கார்ந்திருந்தான் புத்தன்.
அவன் வீற்றிருந்த போதி மரத்தடி
பீரங்கியாய் உருமாறியிருந்தது.
அவன் விடும் மூச்சிலிருந்து
எறிகுண்டுகள்புறப்பட்டன.
யுத்தம்..மரணம்..கச்சாமி...

சிறப்பு கருத்தரங்கு

ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்
ஹெச்.ஜி.ரசூல்

தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டக் கிளைன் 11 - 01 - 2009 ஞாயிறு நாகர்கோவில் அசிசி அரங்கில் ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும் சிறப்பு ஆய்வரங்கை நடத்தியது.

தலித் சிந்தனையாளர் வி.சிவராமன்,கதையாளர் மீரான்மைதீன், ஆய்வாளர் கே.பிரசாத் நிகழ்வை நெறிப்படுத்த அண்ணாச்சி கண்ணன் துவக்கவுரை நிகழ்த்தினார்.

கேரளமாநில மொழியியற்புல ஈழத்து ஆய்வாளர் கலாநிதி அரங்கராசன் சங்க இலக்கியம் முதல் ஈழம் பொருளில் ஆய்வுரையை நிகழ்த்தினார். கி.பி.இரண்டாம் நூற்றாண்டு அகழ்வாராய்ச்சி,சங்க இலக்கியப் புலவர் ஈழத்து பூத்தன் தேவனார் சார்ந்து ஈழம் கருத்தாக்கத்தை அடையாளப் படுத்தினார்.

ஆறுமுக நாவலரின் சைவ மீட்டுருவாக்கத்திற்கு மாற்றமான கனகிபுராணம், கோட்டுப்புராணம், பனையை மையப் பொருளாக்கிப் பாடப் பட்ட தாலப் புராணம் குறித்தும் விரிவாக உரையாடினார்.

கவிஞர் ஆர்.பிரேம்குமார் இக் கட்டுரைமீது தனது கருத்துரையைத் தெரிவித்தார்.

முனைவர் செல்வகுமாரன் புலம்பெயர் கதையுலகம் பொருளில் சோபாசக்தி, சக்ரவர்த்தி, கலாமோகன் படைப்புகளில் வெளிப்படும் வாழ்வியல் யதார்த்தத்தை விவரித்தார்.

கவிஞர் ஜி.எஸ்.தயாளன் கவிதை எதிர்ப்பின் மொழி பொருளில் வ.அய்.ச.ஜயபாலன், சேரன், சோலைக்கிளி, அனாரின் கவிதைமொழி குறித்து உரையாடினார்.

கவிஞர் நட.சிவக்குமார் ஈழ இலக்கியத்தில் தலித்திய வெளி பொருளில் டேனியலின் பஞ்சமர், கானல், பஞ்சகோணங்கள் நாவல்களை முன்வைத்து உரையாற்றினார்.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மீசான்கட்டைகளில் மீளஎழும் எழுத்துக்கள் பொருளில் அஸ்ரப் சிகாப்தீன், ஸதக்கா, நளீம், றஸ்மி, அலறி கவிதைகளினூடாக தமிழ் முஸ்லிம்கள், தமிழ் விடுதலை போராளிகள் உறவுகள்., முரண்கள் வெளிப்படுவதை முன்வைத்தார்.

விமர்சகர் அனந்தசுப்பிரமணியன் தற்கால ஈழத்து குறும்படங்களின் கலைநோக்கு குறித்து பேசினார்.

நிறைவுரை ஆற்றிய சுபாஷ் சந்திரபோஸ் தற்போதைய உடனடித் தேவை இலங்கையில் போர்நிறுத்தமே இந்திய தமிழ் அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் லட்சக்கணக்கான தமிழ்மக்களை கொன்றுகுவிக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றார்.

கவிஞர் பூதை செ.கன்ணன் நிகழ்வு குறித்த விமர்சனங்களை முன்வைத்து நன்றி கூறினார்.




குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும்பண்பாடும்

ஹெச்.ஜி.ரசூல்

தமிழ்நாடு இலக்கியப் பெருமன்ற குமரிக்கிளையும் நாகர்கோயில் திருச்சிலுவை மகளிர் கல்லூரி தமிழ்துறையும் இணைந்து 18- 12- 2008 அன்று குமரிமாவட்ட அடித்தள மக்கள்வரலாறும் பண்பாடும் என்ற பொருளிலொரு சிறப்பு கருத்தரங்கை நடத்தியது.

கல்லூரி முதல்வர் அருட்சகோ.முனைவர் ரொசாலி முன்னிலை வகிக்க முனைவர் வ.ஜெயசீலி வரவேற்புரையை நிகழ்த்தினார்.

ஹெச்.ஜி.ரசூல் நிகழ்வை நெறிப்படுத்தி தலைமையுரை வழங்கும் போது கோட்பாடுகளின் வெளிச்சத்தில் வரலாற்றை மீளாய்வுச் செய்கையில் மகாராஜாக்கள்,ஆதிக்கச் சாதிகளுடன் மட்டுமே குமரியை நாஞ்சிலாக வடிவமைக்கும் கருத்தாக்கத்திற்கு மாற்றாக பன்மைத்தன்மை அடிப்படையில் அணுகவேன்டும் என்றார். சமணம், கத்தோலிக்க கிறிஸ்தவம், சீர்திருத்தக் கிறிஸ்தவம்,அடித்தளமுஸ்லிம்கள் தலித்கள் பழங்குடிகள் கலாச்சாரங்களின் வரலாற்றினோடுஅணுகும் முறையியலை முன்வைத்தார். வரலாற்றை மேலிருந்து எழுதுதலுக்கு மாற்றாக கீழிருந்து வாய்மொழிக்கதைகளினூடே உளவியல் பகுப்பாய்வு முறையை ஆலன்டான்டிஸ் சிந்தனைகளின் வழியாக அணுகவும் நுண்வரலாறுகள் குறித்த கவனிப்பையும் கூறினார்.

ஆய்வாளர் ஆர். பிரேம்குமார் கிறிஸ்தவ வரலாறும் அடித்தளமக்களெழுச்சியும் என்றபொருளில் உரையாற்றினார்.புனித தோமா, 16-ம் நூற்றாண்டின் புனித பிரான்சிஸ் சேவியர், 19-ம் நூற்றாண்டின் ரிங்கல் தெளெபே,மீட்பாதிரி பின்னணியில் தோள்சீலைப் போராட்டம், தீன்டாமை வரிக்கொடுமைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை விவரித்தார்.

ஆய்வாளர் அனந்தசுப்பிரமணியன் நமது பெருமிதங்களுக்குள் பூசி மெழுகப்பட்ட உயிப்பலிகளை ஞாபகப்படுத்தினார்.குமரி மண்ணின் சமணப் பின்னணியை எடுத்துக் கூறி ஜைனக் கோவில்கள் வைதீகக் கோவில்களாக மாற்றப்பட்ட வரலாற்றை எடுத்துரைத்தார்.

குறும்பட இயக்குனர் எஸ்.ஜே.சிவசங்கர் தலித் வரலாற்றோடு தொடர்புடைய வேதமாணிக்கத்தையும், அயோத்திதாசரின் தமிழ் பெளத்தத்தையும், குமரிப் பழங்குடிகளான காணிக்காரர்களின் வாழ்வியல் சடங்குலகத்தையும் விளக்கினார்.

ஆய்வாளர் சாகுல்ஹமீது அஞ்சுவன்னங்களின் வழியும், கேரள மாப்பிள்ளை முஸ்லிம்களின் பண்பாட்டு வரலாற்றையும் விளக்கிக் கூறினார். நெறியாளர் ரசூல் வரலாற்றிற்கும் படைப்பிலக்கியத்திற்குமான ரகசியத் தொடர்பையும் புனைவாக்கம் குறித்தும் குறிபுபுகளைக் கூறி நிறைவுரை ஆற்றினார்.

நிகழ்வுக்கு தமிழ் துறைத் தலைவர் ஜஸ்டின் பியூலா நன்றி கூறினார்.

முஜீப்ரஹ்மான் படைப்புகள்

தீயடி நானுனக்கு
எச்.முஜீப்ரஹ்மான்

இன்று இலக்கிய கூட்டத்தில் எனக்கு கட்டுரை வாசிக்க வேண்டிய முறை.கட்டுரையை ஒருமுறை கூட படித்து பார்த்தேன்.நன்றாக வந்திருந்தது.அன்றைய செய்தி தாளில் நகரில் பள்ளியொன்று தீப்பிடித்து பள்ளிகுழந்தைகள் பலர் கருகி இறந்த துக்கச் செய்தி என்னை விசனத்தில் ஆழ்த்தியது.இருந்தாலும் சாயும் காலம் பஸ்ஸை பிடித்து சங்கத்துக்கு சென்றேன்.நகரின் மையத்திலிருந்த அந்த கட்டிடம் இலக்கிய ஆர்வலர்களுக்கு நல்ல தீனி போடும் இடம்.பலமுறை அந்த கட்டிடத்தின் சங்க அறையில் நாங்கள் எல்லோரும் கூச்சல்,கும்மாளம் அடித்தாலும் யாருமே இது பற்றி புகார் தெரிவிக்கவில்லை.அக்கம் பக்கத்தில் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் எíகள் அத்துமீறலை கண்டும் காணாமல் இருப்பது எங்களுக்கு வசதியாக போய்விட்டது.மாதத்தில் ஒரு நாள் இலக்கிய கூட்டம் நடக்கும்.அப்போது யாரவது கதையோ,கட்டுரையோ அல்லது கவிதையோ வாசிக்கக்கூடும்.வாசித்து முடித்த பின் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்படும்.சுமார் மூன்று அல்லது நான்கு மணிநேரம் கலகலப்பும்,உற்சாகமும் எல்லோரின் முகத்திலும் காணப்படும்.பின்னர் அன்றைய கூட்டம் கலைந்து எல்லோரும் போய்விடுவர்.இனி அடுத்த கூட்டம் அடுத்த மாதம் தான்.கூட்டத்தில் நாíகள் இருபது இருபத்தைந்து பேர் வரை இருப்போம்.ஆனால் எல்லோரும் கலை,இலக்கிய ஆர்வலர்களும்,பல் திறமை வாய்ந்தவர்களும் தான்.இன்று எனது முறை.பஸ்ஸை விட்டு இறíகும் போது இருட்டதுவíகி விட்டது.அங்கிருந்து விறுவிறு என நடந்து கட்டிடத்தை அடைந்து,அறையை அடைந்த போது நண்பர்கள் உற்சாகமாக என்னை வரவேற்றார்கள்.கூட்டம் நான் வந்த சிறிது நேரத்திலேயே ஆரம்பித்தது.முதலில் பள்ளிக்குழந்தைகள் மரணத்திற்க்காக ஆழ்ந்த இரíகல் அஞ்சலி சமர்ப்பிக்கப்பட்டது.அதன் பின் ஒன்றிரண்டு நிகழ்வுகளுக்கு பின் எனது கட்டுரை வாசிக்கப்பட்டது.நண்பர்கள் கவனமாக அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.ஆனால் எனக்கு உஷ்ணம் அதிகமாகி வியர்வை வழிய ஆரம்பித்தது.ஒரு வழியாக கட்டுரை முடிந்தது.நான் அதிகபதட்டத்துடன் வழக்கத்துக்கு மாறாக இருந்தேன்.என்ன காரணம் என்று தெரியவில்லை.பதட்டத்தை தணிக்கும் வகையில் சிகரெட் ஒன்றை வாயில் வைத்து நண்பர் ஒருவரிடம் தீப்பெட்டி கேட்டேன்.தீப்பெட்டியை வாíகி தீக்குச்சியை உரசி வாயருகே கொண்டு போனது தான் தாமதம்.சட்டென தீ என் உடம்பெல்லாம் பரவியது.பரவிய வேகத்தில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.நண்பர்கள் எல்லாம் அலறியடித்து கொண்டு என்னை தீயிலிருந்து காப்பாற்ற முயன்றனர்.தீ ஜீவாலைகள் படபடத்து காற்றில் அசைந்தாடின.நான் மூர்ச்சையாகிப்போனேன்.கண்விழித்து பார்த்த போது கட்டிடத்தின் வெளியே ஒரு திண்ணையில் படுக்கவைக்க பட்டிருந்தேன்.ஆம்புலன்ஸ் சைரனை ஒலித்தவாறு வந்து கொண்டிருந்தது.தீயணைக்கும் படைவீரர்கள் தண்ணீரை என்மீது பீச்சிக்கொண்டிருந்தனர்.ஆனால் தீ அணையாமல் படர்ந்து பிடித்து எரிந்து கொண்டிருந்தது.கட்டிடத்தின் வெளிபாகம் முக்கியமான சாலை என்பதால் ஜனநடமாட்டம் என்னை சுற்றியிருந்தது.போலிஸ்,அதிகாரிகள்,மக்கள் பெருங்கூட்டம் என்று அந்த பகுதி களேபரப்பட்டது.இதனால் பெருத்த டிராபிக் ஜாம் உண்டானது.வண்டிகள் இஞ்ச் இஞ்ச் ஆக நகர்ந்தன.வண்டியிலிருந்து பார்பவர்கள் என்னை பார்த்து திடுக்கிட்டார்கள்.நான் எரிந்து கொண்டிருந்தேன்.பல மணிநேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.விஷயம் அறிந்து தொலைகாட்சி நிருபர்களும்,பத்திரிக்கை நிருபர்களும் முக்கிய பிரதானிகளும் வந்திருந்தனர்.பிளாஷ் லைட்டுகள் வினாடிக்கு வினாடி மின்னிக்கொண்டிருந்தது.சோர்வு மாறிய நான் ஆயசமாக எழும்பி அமர்ந்தேன்.அய்யோ பேய் என்று அய்ந்தாறு பேர் ஒடினர்.ஒரு பெண்மணி மூர்ச்சையாகி விழுந்தாள்.கலெக்டர் இரண்டடி பின் வாங்கினார்.ஆனால் என்மீது தண்ணீரை பீச்சியடித்தவர்கள் தண்ணீர் தீர்ந்து விட்டது என்று கூறி மெல்ல நகர்ந்தனர்.அமைதியாய் இருந்த அந்த பகுதியில் ஜனக்கூட்டம் மெல்ல முணுமுணுத்தவாறு பிரிய ஆரம்பித்தனர்.கலெக்டர் முக்கிய ஜோலி ஒன்றிருப்பதாக கூறி காரில் பறந்து விட்டார்.எனது நண்பர்கள் பீதியில் அந்த இடத்திலேயே உறைந்து நின்றனர்.ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்று கூறி கட்டிடத்தின் அடிபகுதியில் நிறுவனங்களை நடத்திக்கொண்டிருந்தவர்கள் கடைகளின் சட்டரை இழுத்து அடைத்தனர்.அந்த பகுதில் இருந்த சர்ச்சுகளில் இருந்து வந்த அய்ந்தாறு பாதிரிமார்கள் இந்த ஆத்மாவுக்காக விஷேச பிரார்த்தனை நடத்த போவதாக கூறி போய்விட்டார்கள்.போலீஸ் எனது நண்பர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தனர்.தீயை அணைக்க என்னஎன்னமெல்லாம் முடியுமோ அதெல்லாம் பரிசித்து பார்த்தாகிவிட்டது.டாக்டர்களும்,நர்ஸ்களும் இனியும் நின்று பலனில்லை என்றுணரவே அவர்கள் பறப்பட்டனர்.எங்கிருந்தோ கூட்டத்தில் வந்து புகுந்து என்னருகே வந்த ஒரு பைத்தியக்காரன் இதெல்லவோ வெளிச்சம்.இதெல்லவோ ஒளி என்று கூறி என்னை வணங்கினான்.போலிஸ் வேகமாக வந்து அந்த பையித்தியகாரனை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர்.ஆனால் அவன் சப்தமிட்டு சொன்னான் பிரகாசத்தை நான் கண்டேன்.கூட்டத்தில் சலசலப்பு தோன்றியது.ஒரு வயதான பெரியவர் ஜோதியை வணங்குங்கள் ஜோதியை வணங்குங்கள் என்று சப்தமிட்டார்.அந்த மாத்திரத்திலே அய்ந்தாறு பேர் என்னை கைக்கூப்பி வணíகினர்.டிவி கேமராக்கள் ஒன்று விடாமல் அத்தனையும் பதிவாக்கிக் கொண்டிருந்தது.மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டது.ஒரு பெண் கூந்தலை அவிழ்த்து தலையை வேகமாக சுற்றி டேய் பசங்களா நான் தாண்டா அம்மா வந்திருக்கென்.என் பையனை ஒண்ணும் செய்யாதிíகோ என்று ஆவேச சப்தமெழுப்பியவாறு சட்டென மயங்கி விழுந்தாள்.ஏதோ விபரீதம் நடக்கிறது என்று முணுமுணுப்புகள் எழுந்தவாறு மக்கள் கலைவதும்,கூடுவதுமாக இருந்தார்கள்.டிராபிக் போலிஸ் ஒலிபெருக்கியை வைத்துக் கொண்டு இந்த பக்கம் யாரும் வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தனர்.நான் சற்று நேரத்திலே அந்த நகரின் பேச்சு பொருளாக மாறினேன்.எல்லோரும் என்னை பற்றியே பேசுகிறார்கள்.வானொலியில் செய்தி வந்து விட்டது .சற்று முன் கிடைத்த செய்தி என்று எதிரே உள்ள டிவி ஷோரூம் கடையிலிருந்த அத்தனை டிவிகளிலும் உள்ள செய்திவாசிப்பாளர்களும் என்னைப்பற்றிச் சொல்ல கூட்டம் என்னருகில் இருந்து விலகி கடையின் முன் கூடியது.ஒரு செய்தி நிருபர் என்னருகே நின்று கொண்டு மைக்கை கையில் வைத்தவாறு ஜனகளேபரம் அதிகமாகி வருகிறது ஆனால் இந்த தீ மர்மமாகவே இருக்கிறது.இன்னும் அது படர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.விஷேச செய்திகளுக்காக பாலகிருஷ்ணன் என்று சொன்னதை கேமராவில் பதிவாக்கிக் கொண்டிருந்தனர்.நாலுமுக்கு திடலில் கட்சிக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.சட்டென ஒலிப்பெருக்கியில் இருந்து பஸ்ஸ்டாண்டு அருகே ஒரு மனிதன் தீயில் எரிந்து கொண்டிருக்கிறான்.பலமணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை.என்று தொடíகி அதிகாரிகளையும்,அரசையும் கண்டித்து தலைவர் ஆவேசமாக பேசிக்கொண்டிருப்பது கேட்டது.இனியும் இங்கிருப்பது அவ்வளவு நல்லதல்ல என்றுணர்ந்த நான் மெல்ல எழுந்தேன்.ஜனக்கூட்டத்தில் சலசலப்பு அதிகரித்தது.நான் மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.ஜனம் வழிமாறிகொடுத்து விட்டு என்னை கும்பலாக தொடர முயன்றனர்.போலிஸ் மக்களை விரட்டியடித்தனர்.மக்கள் சிதறி ஓடினார்கள்.மீண்டும் எங்கிருந்தோ மக்கள் கூட்டம் வந்தது.நான் பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தேன்.பயங்கரமான அமைதி நிலவியது .மெல்ல மெல்ல என்னை அனைவரும் பின் தொடர்ந்தனர்.அக்கம் பக்கத்திலுள்ளோரெல்லாம் வாய்பிளந்து நின்றனர்.பஸ் ஸ்டாண்டு இப்போது என்னை பார்த்து கலவரப்பட்டது.மக்கள் அíகும் இíகுமாக ஓடினார்கள்.நான் நின்றிருந்த பஸ் ஒன்றில் ஏறி அமரமுற்பட்டேன்.அப்போது தான் நான் செய்த தவறு என்ன என்பதை உணர்ந்தேன்.பஸ்ஸிலிருந்து எல்லோரும் இறíகி ஓட்டமெடுத்தனர்.நான் இருக்க முற்பட்ட சீட் இப்போது தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.அந்த இடமெல்லாம் கரும் புகை சூழ்ந்துக் கொண்டது.மக்களெல்லாம் கலைந்து ஓடத்துவíகினர் .கொஞ்ச நேரத்தில் அடுத்த பஸ்ஸையும் தீ பிடித்துக் கொண்டது.இப்படி ஒவ்வொரு பஸ்ஸாக பற்றி எரிய ஆரம்பித்தது.பஸ்ஸ்டாண்டு களேபரத்தொடங்கியது.சைரனை ஒலித்தவாறு தீயணைப்பு வண்டிகள் வேகமாக பஸ்ஸ்டாண்டுக்குள் வந்தன.நல்ல வேளையாக மேகíகள் கூட ஆரம்பித்தது.லேசாக காற்றும் ஓíகி வீசத்துவíகியது.எíகோ ஓரிடத்தில் இடி இடித்தது.இப்போது வானமெíகும் மின்னல் கீற்றுகள் ஓயாமல் தெறிக்க ஆரம்பித்தன.காற்றில் என்மீது படர்ந்த தீ ஆழி பிடித்துகொண்டிருந்தது.மழை வரலாம் என்று நான் நினைத்த அடுத்த கணமே மழை பெய்ய ஆரம்பித்தது .மழையின் வேகம் கூடிக்கொண்டிருந்தது.பஸ்களில் பிடித்த தீ கொஞ்சம் கொஞ்சமாக முழுவதுமாக அணைக்கப்பட்டது.அதன் பிறகு பஸ்ஸ்டாண்டில் வந்த மக்கள் பேருந்து செட்டில் நின்றவாறு என்னை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.எல்லோரும் ஆச்சரியப்பட என்னை பார்த்தனர்.மழையில் கூட தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தது.நான் நடந்து கொண்டே ஆலோசித்தேன்.எப்படி ஊருக்கு போவது?வானில் இடிகள் ஒலிக்க மின்னல்கள் கீற்றுகளின் ஒளியில் சற்று அதிகமான பிரகாசம் காணப்பட்டது.திடீரென எனது உடம்பு அதிர ஆரம்பித்தது.நான் என்னையறியாமல் சக்கரம் போல சுழன்றேன்.மக்கள் வைத்தகண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.சுழன்று சுழன்று நான் ஒரு தீப்பந்தாக மாறினேன்.வட்டவடிவில் தீப்பந்து சுழன்றது.சட்டென தீப்பந்து மேலே உயர்ந்து பறந்தது.ஏதோ எரிநட்சத்திரம் போவது போல இருந்தது.நான் மேலுயர்ந்து பறந்து சில வினாடிகளில் என் வீட்டு முற்றத்தில் இருந்தேன்.நான் இப்போதும் சக்கரம் போல் சுழன்று கொண்டிருந்தேன்,சுழற்சியின் வேகம் குறைந்து சாதாரணநிலைக்கு வந்தேன்.ஆனால் தீ இன்னும் எரிந்து கொண்டு தானிருக்கிறது.அட நம்ம வீட்டு பகுதியில் மழையின் அறிகுறியே இல்லையே.யாரோ வீட்டு வாசலை திறப்பது போலிருந்தது.என் மனைவியே தான்.அடுத்த கணமே அவள் கூக்குரலிட்டாள் தீ..தீ..“மம்மி மம்மி டிவில டாடி படம் போட்டிருக்கு” என்று குரலெழுப்பியவாறே ஓடி வந்த என் குழந்தைகள் என்னைப் பார்த்து அதிர்ந்து நின்றனர்.நிலைமை சகஜத்துக்கு வர “நான் தாண்டி ஒம்புருஷன்” என்று அவளிடம் நடந்த விஷயமெல்லாம் கூறினேன்.அவள் அழுது ஆர்ப்பரித்தாள்.சிறிது நேரம் கழித்து நான் வீட்டுக்குள் போகாமல் மாடிப்படி ஏறி மாடிக்கு வந்தேன்.வீட்டுக்குள் சென்றால் தீபிடித்து ஏதாவது விபரிதம் நடந்து விடுமோ என்று தான் மாடிக்கு வந்தேன்.மாடியில் வந்து தரையில்உட்கார்ந்தேன்.வீட்டில் போன் ஒலி ஒலிப்பதும் அவள் பதிலளிப்பதுமாக வீடு அமர்களப்பட்டு கொண்டிருந்தது.சற்று நேரத்துகெல்லாம் வீட்டின் முன்புற கேட் வாசலருகே ஒரு டாக்ஸி வந்து நின்றது.அதிலிருந்து என் நண்பர்கள் இரண்டுபேர் வேகமாக வீட்டிக்கு வந்தார்கள்.சில வினாடிக்குள் என் மனைவி,குழந்தைகள்,நண்பர்கள் அனைவரும் என்னருகே வந்தனர்.என் நண்பர் கேட்டார் “உடம்புக்கு ஒண்ணுமில்லையே?” நான் இல்லை என்று தலையசைத்தேன்.மணித்துளிகள் கரைய கரைய என் வீடு முழுக்க உறவினர்களும்,பந்துகளும் வந்து குவிந்தனர்.சற்று நேரம் என்னோடு உரையாடிக்கொண்டிருந்த என் நண்பர்கள் விடைபெறுவதாக கூறிச் சென்று விட்டனர்.அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள மின் விளக்குகள் பிரகாசித்தன.பலர் தங்கள் தங்கள் வீடுகளின் மொட்டைமாடியில் இருந்து என்னை பார்க்க முயற்சித்தனர்.பலரும் என்னை பார்க்க விரும்புவதாக விருப்பம் தெரிவித்தனர்.ஆனால் என் சிறிய தந்தையார் யாரையும் பார்க்க அனுமதி மறுத்துவிட்டார்.நேரம் செல்ல செல்ல வீடுகளின் வெளிச்சங்கள் சூன்யமாயின.அமைதி நிலவ தொடங்கியது.நான் அப்படியே அமர்ந்திருந்தேன்.”குழந்தைகள் தூங்கிவிட்டதா?” என்று மனைவியை கேட்டேன்.அவள் பதிலேதும் சொல்லாமல் ஆம் என்று தலையசைத்தாள்.நள்ளிரவை தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.மனைவி சுவரில் சாய்ந்த படியே கண்ணயர்ந்தாள்.திடீரென வானத்தில் நெருப்பு கோளம் ஒன்று தெரிந்தது.அது அப்படியே பெரிதாகிக் கொண்டு வந்தது .பயíகரமான வெளிச்சம்.இப்போது நெருப்பு கோளம் எனக்கு மேலே வந்து நின்றது.சட்டென அது வெடித்து சிதறியது,வானமெíகும் மத்தாப்பு பூபாளம் விரித்தது போல இருந்தது.அய்ந்தாறு தேவர்கள் என் முன்னே சற்று உயரத்தில் நின்று கொண்டிருந்தனர்.மநுவே அக்னி தேவனின் ஆக்ஜையால் நாம் வந்தோம்.இன்றோடு உமது சாபம் தீர்ந்தது.நீர் எம்முடன் வரவேண்டும் என்று தேவர்கள் என்னைப் பார்த்து கூறினர்.நான் எப்படி என்று கேட்பது போல் பார்த்தேன்.அவர்கள் வா என்று கைகாட்டி அழைத்தனர்.நான் என்னையும் அறியாமல் அந்தரத்தில் உயர்ந்து சென்றேன்.மேலிருந்து கீழே பார்த்த போது எனது உடம்பு சவம் போல கிடந்தது.வானம் சூன்யமானது.நான் நினைவிழந்தேன்.சில மணித்துளிகள் கழிந்து நான் நினைவு திரும்பியவனாய் கண்திறந்து பார்த்த போது எனது மனைவி உறíகிக்கொண்டிருப்பது தெரிந்தது.இப்போது எனது உடம்பில் தீ எரிவது நின்று விட்டது.வானம் காரிருளை விடாமல் பற்றியிருந்தது.நட்சத்திரíகளை சுத்தமாக வானில் காணமுடியவில்லை.நள்ளிரவை தாண்டி நேரம் போய்க்கொண்டிருந்து.வானின் தூரதூரத்தில் சிறிதாய் ஒரு வெளிச்சம் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் அது ஒரு நெருப்புக் கொளமாக பெரிதாகி பூமியை அடையும் போது எரிக்கல்லோ என்று நினைக்கவைத்தது.அடர்ந்த அந்த காடுகளின் இருப்பின் சலனைத்தை குலைத்து,மரíகளின் கிளைகளை ஒடித்து கொண்டு அசுர வேகத்தில் எரிக்கல் பூமியை மோதியது.பூமி அதிர்ச்சி போல இருந்தது.பூமி பிழந்தது.மரíகளெல்லாம் தீ பிடித்து எரிய ஆரம்பித்தன.எரிக்கல் பூமியில் மோதியதால் பெரும் பள்ளதாக்கு உருவானது.தீப்பிளம்பாய் காட்சியளித்த பள்ளத்தாக்கு மெல்ல நேரம் செல்ல செல்ல இருண்டு போனது.ஆனால் காடுகளில் ஆíகாíகே மரíகள் எரிந்து வெளிச்சத்தைக் கக்கிக்கொ ண்டிருந்தது.நடப்பது யாதும் அறியாமல் அந்த ராஜ்ஜியத்தின் மக்கள் துயில் கொண்டனர்.சில கிராமíகளில் நாய்கள் விடாமல் குரைத்துக் கொண்டிருந்தன.பள்ளதாக்கில் ஒரு சிறிய துண்டு கல் மாத்திரம் ஒளி வீசியது.அதுவும் சிறிய வெளிச்சமாக.சற்று நேரத்திற்க்கெல்லாம் அந்த கல் ஒளியிழந்தது.பூமியின் பிளவில் இப்போது வெளிச்சம் பிரிந்து சிதறியது.வேகவேகமாக தீ சர்ப்பம் ஒன்று வெளியே வந்தது.காலையில் காடுகளில் மரமுறிக்கவும்,வேட்டையாடவும் பலரும் வந்தனர்.அந்த நாட்டின் மந்திரியின் மகனும்,தளபதியின் மகனும் குதிரையில் பாய்ந்து காட்டினுள்ளே வந்து கொண்டிருந்தனர்.காட்டின் நடு பகுதிக்கு வந்த அவர்கள் மயானம் போல் காட்சியளித்த அந்த பள்ளத்தாக்கினை கண்டனர்.இருவரும் தைரியமாக பள்ளத்தாக்கில் இறíகி நடந்தனர்.எíகும் சாம்பல் காடாக இருந்தது.சுற்றி சுற்றி பார்த்தவர்கள் ஏதோ அதிசயம் தான் என்று எண்ணியவாறு மீண்டும் பள்ளத்தாக்கினை விட்டு அகல நினைத்து நடந்தனர்.ஆனால் மந்திரியின் மகன் தரையில் ஏதோ ஒரு ஒளி இழைந்து செல்வது போலகண்டு அதை பின் தொடர்ந்தான்.பள்ளத்தாக்கை விட்டு வெளியே வந்த தளபதியின் மகன் திரும்பி பார்த்த போது தனது நண்பனை காணமல் சப்தம் கொடுத்தான்.தரையில் ஊர்ந்த தீ சர்ப்பம் சட்டென சீறி எழுந்து மந்திரியின் மகனைகடித்தது.அப்போது நண்பனும் அíகே ஓடோடி வந்தான் .தீ சர்ப்பம் பயíகரமாக காட்சியளித்தது.நண்பன் அவனது கண்னெதிரிலே தீப்பிடித்து அலறியவாறு கருகினான்.இப்பொது தீ சர்ப்பம் இவனை பார்க்கவே ஓடினான்.பயத்தில் உடம்பு அதிர்ந்தது.ஓடி ஓடி குதிரையை அடைந்து ஒரேதாவலாக அதன் மீது ஏறி குதிரையை விரட்டினான்.தீ சர்ப்பமும் சளைக்காமல் வேகமாக நகர்ந்து இவனை துரத்த துவíகியது.அரண்மனையில் பிரபல வைத்தியரும்,ஆஸ்தான ஜோதிடருமாகிய அந்த கிழவன் சோழிகளை உருட்டிவிட்டு கண்மூடி மீண்டும் சோழிகளை உருட்டினான்.மாகாபிரபோ என்று சோதிடம் சொல்ல ஆரம்பித்தான்.வானுலகில் கடும் சினம் கொண்டவனும்,கருணையானவானாகிய அக்னி தேவனின் மெய்க்காப்பாளன் நேரம் தவறி பணிக்கு வந்த காரணத்தினால் அவனை அக்னிதேவன் தீ சர்ப்பமாக சபித்து பூமியில் அலையும் படி செய்துவிட்டான்.அந்த தீ சர்ப்பத்தின் காரணமாக பல நாசநஷ்டங்கள் நேரிடும்.இனி வரும் காலíகளில் தீயினால் பெரும் அழிவுகள் சம்பவிக்கும்.இந்த நாட்டின் மாடமாளிகைகளும்,கூட கோபுரíகளும் தீக்கிரையாகும்.இந்நாட்டின் தலைநகரமே எரிந்து சாம்பலாகும்.பல நூற்றாண்டுகள் தீ சர்ப்பத்தின் பிடியில் உழலும்.இறுதியில் தீ சர்ப்பம் சாப விமோசனம் பெற்று மீண்டும் வானுலகம் செல்லும்.கிழவன் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான்.தீசர்ப்பம் தலைநகரில் நுழைந்தது.சர்வதேச பல்கலைகழகம் ஒன்றில் வரலாற்று பேராசிரியராகவும்,சிறந்த ஆய்வாளர் என்று பெருமைபெற்ற அந்த முதிர்ந்த புரபசர் தமது ஆய்வினை பற்றி நண்பருடன் விவாதித்துகொண்டிருந்தார்.சிலப்பதிகாரத்தை நாமெல்லாம் கற்பின் மகிமையைச் சொல்லும் காவியமாகத் தான் இதுவரை கற்ப்பிக்கப்பட்டிருக்கிறோம்.என்னை கேட்டால் அது சபிக்கப்பட்ட தீ சர்ப்பம் ஒன்றின் கொடும் கோபத்தின் கதையாகவும் இருக்கிறது என்று எல்சிடி புரஜகடரை ஆன் செய்தார்.தீ சர்ப்பம் ஒன்றின் பழíகால வரைபடம் ஒன்று.தீ சர்ப்பத்தின் வரலாறைச் சொல்லும் “ முத்திரா” என்ற சமஸ்கிரத மொழியில் அமைந்த சுவடி,சீறிய கோலத்தில் தீயை உமிழும் போது ஏற்படும் தீக்கிரையான பல பகுதிகள்,பலரின் உடம்பில் தீ சர்ப்பம் ஜக்கியமாகி தீக்கிரையாக்கிய படங்கள் என்று வரிசையாக படங்களை தமது நண்பருக்கு காட்டிக்கொண்டிருந்தார் அந்த வரலாற்று ஆய்வாளர்.இரவு கவிந்து நகரின் கோலம் மாறிக்கொண்டிருந்தது.அந்த பெண் வீட்டில் தலைவிரி கோலமாக தரையில் கிடந்தாள்.ஏதோ பயíகரமான சம்பவம் தனது வாழ்வில் சம்பவித்து விட்டது என்ற நிராசையில் மனமுடைந்த அவள் மயங்கி விட்டாள்.தீ சர்ப்பம் மெல்ல அவளது வீட்டின் அருகில் வந்தது.அவளை அது பார்த்து விட்டு ஜன்னல் வழியாக வீட்டினுள் பிரவேசித்தது.மயíகியநிலையில் கிடக்கும் அவளருகே சர்ப்பம் சென்றது.சர்ப்பம் அவளின் மேல் ஒளியை கக்கியது.சற்று நேரத்தில் சர்ப்பம் அவளுடன் ஜக்கியமாகியது.திடிரென கண்விழித்த அவளது கண்கள் பளபளவென்று ஒரு கணம் மின்னிமறைந்தது.தரையில் இருந்து எழும்பிய அவள் “நான் பழிவாங்குவேன்” என்று ஆவேசமாக கத்தினாள்.அவளின் முகம் சர்ப்பத்தை போல இருந்தது.புரபசர் எல்சிடி புரஜக்டரை ஆப் செய்து விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தார்.தீ சர்ப்பம் இரண்டு நண்பர்களில் ஒருவனை தீக்கிரையாக்கிவிட்டு அடுத்தவனை கொல்வதற்க்காக அவனை விரட்டியது.ஆனால் அவன் மின்னல் போல் மறைந்து விட்டான்.ஆனாலும் அவனைத்தேடி நகருக்கு வந்த சர்ப்பம் அவனை தேடியலைந்தது.ஆனால் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை.கடும் கோபம் கொண்ட சர்ப்பம் அவனை மறைத்து வைத்திருக்கும் அந்த நகரை தீக்கிரையாக்கவிரும்பியது.இந்த நிலையில் தான் கண்ணகி தனது கணவன் கோவலன் கொலையுண்ட செய்தி அறிந்து அழுது அரற்றினாள்.மதுரையம்பதி அரசனை சந்தித்து நீதி வேண்டும் என்று கேட்கவேண்டும் என்று அவள் முடிவு செய்தாள்.ஆனால் சாதாரண அந்த பெண்மணியால் மதுரையை தீக்கிரையாக்கமுடியாது.அங்கே தான் தீ சர்ப்பத்தின் பாத்திரம் முக்கிய இடம் பெறுகிறது.பழி வாíகும் எண்ணத்தில் அலைந்து திரிந்த சர்ப்பம் தற்செயலாக அவளைக் கண்டது.அவள் மயíகி கிடக்கிறாள்.இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது என்றெண்ணிய சர்ப்பம் அவளுடம்பில் ஜக்கியமானது.அடுத்த நாள் அவள் சிலம்புடன் அரண்மனைக்கு வந்து அரசபையில் மன்னனிடம் நீதி கேட்டாள்.மன்னனும் தவறையுணர்ந்தான்.அப்போது தீ சர்ப்பம் அவளுக்குள் விழித்துக் கொண்டது.அவளது கண்கள் பளபளத்தவாறு மின்னி மறைந்தது.கோபத்தில் அவள் முகம் சர்ப்பத்தை போல ஆனது.அவள் உடம்பு திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.அவள் வாயை திறந்து தீயைக் கக்கினாள்.எதிர்பாரத இந்த தாக்குதலை மன்னனும்,ராணியும் எதிர்ப்பார்க்க வில்லை.அவள் வாயைத் திறந்து ஊ ஊ என்று தீயை ஊதினாள்.அந்த தீயில் பட்டு மன்னனும்,இராணியும் சிறிது நேரத்துக்குள்ளே கருகி செத்தனர்.அரண்மனை தீ பிடிக்க தொடங்கியது.அவளது வாயிலிருந்து அதிபயங்கரவேகத்தில் தீயின் நாக்குகள் எல்லாவறையும் சுவைக்க துவங்கின.அரண்மனை தீயின் வேகத்தில் இடிந்து விழத்துவங்கியது.தீ மளமளவென்று பரவியது.வெளியே வந்த அவள் மாடமாளிகைகள்,கூட கோபுரங்கள் கடைகள்,தெருக்கள் என்று தீயை கக்கியவாறு நடந்தாள்.நகர் முழுக்க அலறல் ஒலிகள் கேட்டுக் கொண்டே இருந்தது. நான்கு தெருக்கள் சங்கமிக்கும் இடத்திலிருந்து கொண்டு அவள் பயங்கரமாக சிரித்தாள்.அந்த சிரிப்பின் வக்கிரம் தெரிந்தது. அவள் கையை நீட்டினால் அதிலிருந்து தீப்பந்தங்கள் தெறித்து எரிய ஆரம்பித்தன.அவள் நடந்து கொண்டே எல்லாவற்றையும் தீக்கிரையாக்கினாள்.நகரை எரித்து முடித்து விட்டு பள்ளத்தாக்குக்கு திரும்ப வேண்டும் என்று தீசர்ப்பம் நினைத்தது.அவள் உடல் அதிர்ந்து குலுங்கியது.அதே வேகத்தில் சக்கரம் போல சுற்ற துவங்கினாள்.சற்று நேரத்தில் ஒரு தீ பந்தாக மாறி வானோக்கி பறந்தது.பள்ளத்தாக்கில் வந்த தீ பந்து சுற்றி பழைய நிலைக்கு வந்ததது.அவள் மூர்ச்சையாகி விழுந்தாள்.மயங்கி கிடந்த அவளில் இருந்து தீ சர்ப்பம் வெளியேறி பள்ள தாக்கில் இருந்த பிளவினுள் புகுந்து கொண்டது. அவளின் உடம்பில் தீ எரிவது நின்று விட்டது