Sunday, November 23, 2008
செவ்வாய் சந்திப்பு
நாகர்கோவிலில் நமது அலுவலகத்தில் வைத்து நவம்பர் 25 அன்று நடைபெறும் செவ்வாய் சந்திப்பில் நமது தோழர் சிவசங்கர் இயக்கிய குறும்படம் 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' திரையிடப்படும். சிவத்தம்பி பற்றிய ஜெயமோகன் கருத்துக்குத் தன் எதிர்வினையை கட்டுரையாக Dr. முத்துமோகன் முன்வைக்கிறார். நண்பர்கள் கலந்துகொண்டு தொடரும் விவாதத்தில் பங்குகொள்ள வேண்டுகிறோம்.
சனிக்கிழமை சந்திப்பு
நவம்பர் 22 சனிக்கிழமை சந்திப்பில் மீரான் மைதீன் சிறுகதை ஒன்றும் குளச்சல் யூசுப் தான் வெளியிட இருக்கும் சிறுகதைத் தொகுப்பிற்கான முன்னுரையை கட்டுரையாகவும் முன்வைத்தனர். தொடர்ந்து, வழக்கம்போல், அவை மீதான விவாதம் நடைபெற்றது.
Wednesday, November 19, 2008
அலைபேசியில் பெருமன்றம்
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் குமரி மாவட்டக் கிளை கலை இலக்கியத் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. வாரம் இருமுறை, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இலக்கியச் சந்திப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மாதம் ஒரு பேரவை, வருடத்திற்கொருமுறை கலை இலக்கிய முகாம், ஏராளமான வெளியீடுகள்...... என நீள்கின்றன செயல்பாடுகள்.
இச்செயல்பாடுகள் பற்றிய தகவல்கள், விபரங்கள் உங்கள் அலைபேசியில் குறுந்தகவலாக அறிய உங்கள் அலைபேசியிலிருந்து JOIN PERUMANTRAM என குறுந்தகவல் (SMS) 567678 என்ற எண்ணிற்கு அனுப்பவும். இது ஒரு முற்றிலும் இலவச செய்திச்சேவை. குறுந்தகவல் பெரிய எழுத்துக்களில் (Capital Letters) எழுதவும்.

Saturday, November 8, 2008
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், குமரி மாவட்டக் குழு.
வணக்கம்.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், கன்னியாகுமரி மாவட்டக் குழு உங்களை அன்புடன் வரவேற்கிறது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், கன்னியாகுமரி மாவட்டக் குழு உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Subscribe to:
Posts (Atom)